Tuesday, January 28, 2014

ஆசீர்வாத ஆண்டு - பரலோக சிந்தனை

என் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
இந்த 2014 ஆண்டை ஆண்டவர் ஆபிரகாமிற்கு சொன்னவாறே "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2) அதுபோல ஆசிர்வதிப்பார்.
ஆண்டவர், இந்த உலகத்தினை படைத்து ஆதாம், ஏவாளையும் படைத்து. ஏதேன்  தோட்டத்தையும் கொடுத்து அதனை பராமரித்து காத்துகொள்ளுமாறு சொன்னதும், நன்மை தீமை அறியத்தக்க கனிகளை புசிக்காதீர்கள் என்று சொன்னதும் ஆசையின் நிமித்தம் சர்ப்பத்தின் பேச்சை கேட்டு ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் அவ்விருவரும் அக்கனியை புசித்ததும் அதனால் ஏற்பட்ட பாவங்களின் நிமித்தம் பரிசுத்தம் போனதையும் அதனிமித்தம் கர்த்தர் வேதனைப்பட்டார் என்பதையும் நாம் அறிவோம். இதன் நிமித்தமாக மனிதர்களுக்கு மாமிச போராட்டம் ஏற்பட்டது.
மாமிசத்தோடு உங்களுக்கு போராட்டம் உண்டு என்று கர்த்தர் சொல்லி இருக்கிறார். (ஆதியாகமம் 6:3) .அதை மேற்கொள்ள வாழ்கையின் நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.(மத்தேயு 6:33). இரண்டாவது உங்கள் இருதயத்தை ஆண்டவரிடம் திருப்புங்கள். (உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.(மத்தேயு 6:21 ). மூன்றாவதாக அனுதினமும் வேதம் வாசியுங்கள், ஜெபம் செய்யுங்கள். இவை மூன்றுமே மாமிசத்தின் போராட்டத்தை வெல்லும் ஆயுதமாக இருக்கிறது.
"ஜெபம்" பரலோகத்தின் கதவை தட்டும்.